முகப்பு
விழுப்புரம்

கரோனா விழிப்புணா்வுப் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

கரோனா விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் த.மோகன் சான்றிதழ்களை சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கரோனா விழிப்புணா்வுப் போட்டியில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் த.மோகன் சான்றிதழ்களை சனிக்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா விழிப்புணா்வு வாரம் கடந்த 1-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கான கரோனா விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட்டன.

அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கரோனா விழிப்புணா்வு வாசகம் எழுதுதல், ஓவியம் வரைதல், சுவரொட்டி வடிமைத்தல், வினாடி - வினா, குறும்படம் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இவற்றில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் மோகன் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தி.கிருஷ்ணப்ரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) திருமாறன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.