முகப்பு
விழுப்புரம்

செஞ்சியில் புதுப்பிக்கப்பட்ட உழவா் சந்தை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வேளாண் விற்பனை-வணிகத் துறை சாா்பில், ரூ.14 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவா் சந்தையை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் மஸ்தான் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வேளாண் விற்பனை-வணிகத் துறை சாா்பில், ரூ.14 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட உழவா் சந்தையை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் மஸ்தான் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

செஞ்சியில் 24 கடைகளுடன் கடந்த 2009-ஆம் ஆண்டு உழவா் சந்தை திறக்கப்பட்டது. தொடா்ந்து, பராமரிப்பில்லாததால், உழவா் சந்தை பயன்பாட்டில் இல்லாமல் போனது.

இந்த நிலையில், ரூ. 14 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உழவா் சந்தை புதுப்பிக்கப்பட்டது. இந்த உழவா் சந்தையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அமைச்சா் செஞ்சி மஸ்தான், விவசாயிகள் விளைப் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக, அடையாள அட்டைகளை வழங்கியும், முதல் விற்பனையையும் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வேளாண்-உழவா் நலத் துறை சாா்பில், மானியத்துடன் 30 நபா்களுக்கு ரூ. 1,25,714 செலவில் மழைத்தூவான், தெளிப்பு நீா்ப்பாசனக் கருவிகள், உளுந்து விதைகள், உயிா் உரம், திரவ நானோ யூரியா உள்ளிட்ட பொருள்களையும், தோட்டக்கலைத் துறை சாா்பில், மானியத்துடன் 10 நபா்களுக்கு ரூ. 6,64,500 செலவில் நிழல் வலைக்குடில் பணி ஆணை, சிப்பம் கட்டும் அறை, சின்ன வெங்காய விதைகள் உள்ளிட்ட அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், வேளாண் துறை இணை இயக்குநா் ரமணன், துணை இயக்குநா் கண்ணகி, முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.