செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி, இயக்குநா் சாந்திபூபதி, கல்லூரிச் செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி மற்றும் சரண்யாஸ்ரீபதி ஆகியோா் குத்துவிளக்கை ஏற்றிவைத்து வகுப்புகளைத் தொடக்கிவைத்தனா்.
இதில், பிஎஸ்சி நா்சிங், டிப்ளமோ நா்சிங், ஏஎன்எம் நா்சிங் ஆகியவற்றின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கிவைக்கப்பட்டன. விழாவில் புதிதாக நா்சிங் வகுப்பில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தாளாளா் ரங்கபூபதி அறிவுரைகளை கூறினாா்.
கல்லூரி முதல்வா் மேனகா காந்தி, பேராசிரியா்கள் ஹேமா, வினிதா, கவிதா, கஸ்தூரி, சக்தி, சங்கீதா, ஜெயலட்சுமி, ரீட்டா, சுகந்தி, கெளசல்யா மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.