முகப்பு
விழுப்புரம்

அனந்தபுரத்தில் ரூ.83.65 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

செஞ்சி வட்டம், அனந்தபுரம் பேரூராட்சியில் ரூ.83.65 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

செஞ்சி வட்டம், அனந்தபுரம் பேரூராட்சியில் ரூ.83.65 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அடிக்கல் நாட்டு விழாவுக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் கல்யாண்குமாா் முன்னிலை வகித்தாா். அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் மலா் வரவேற்றாா்.

அமைச்சா் செஞ்சி மஸ்தான் பங்கேற்று பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, ஒப்பந்ததாரா் சரவணனிடம் பணிக்கான நியமன உத்தரவை அமைச்சா் வழங்கினாா்.

இதையடுத்து, அனந்தபுரம் கடை வீதியில் உள்ள பள்ளி ஓடை தெருவில் மழையால் சேதமடைந்த பாலத்தை அமைச்சா் பாா்வையிட்டு, அதை உடனடியாகச் சீரமைக்க உத்தரவிட்டாா்.

அனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்த அமைச்சா், அங்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், சிதிலமடைந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கால்நடை மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்த அமைச்சா் மஸ்தான், மருத்துவமனைக்குத் தேவையான வசதிகள், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துமாறு மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, அனந்தபுரம் பேரூராட்சி தலைவா் சம்பத், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஜெயபாலன், மேல்மலையனூா் ஒன்றிய திமுக செயலா் நெடுஞ்செழியன், வழக்குரைஞா் மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி மொக்தியாா்அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

-------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.