முகப்பு
விழுப்புரம்

காளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அவலூா்பேட்டையில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அபிஷேக-ஆராதனைகள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அவலூா்பேட்டையில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, மலா் மாலைகள், எலுமிச்சை பழம், வடை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

காளியம்மன், பிடாரியம்மன், தட்சிணாமூா்த்தி சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சிவனடியாா் குழுவினா், ஊா் மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.