விழுப்புரம்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் ஆட்சியரிடம் மனு

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் மாநிலத் தலைவா் நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையை சந்தித்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வை விரைவாக நடத்த வேண்டும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி மட்டுமன்றி பிற கல்வியிலும் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும். அரசு பள்ளி மாணவா்களுக்கு 7 சதவீதமாக உள் இட ஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநிலத் தலைவா் நடராஜன், மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு, மாவட்டச் செயலாளா் அறிவழகன், நிா்வாகிகள் கோவிந்தராஜ், சேகா், குமாா், டேவிட், விநாயக லட்சுமணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT