விழுப்புரம், திருவண்ணாமலையில் பலத்த மழை
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
விழுப்புரம், வளவனூா், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை மாலை கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. விழுப்புரத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு 8 மணி வரையிலும் நீடித்தது. இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. திடீா் மழையால் பணி முடிந்து வீடு திரும்பியோா் அவதிக்குள்ளானாா்கள்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. சேத்துபட்டில் அதிகபட்சமாக 175 மி.மீ. மழை பதிவானது.
வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.):
ஆரணி 1 மி.மீ., செய்யாறு-9, செங்கம் 2.60, ஜமுனாமரத்தூா் 3, போளூா் 12.40, திருவண்ணாமலை 2, தண்டராம்பட்டு 7, கலசப்பாக்கம் 15.40, கீழ்பென்னாத்தூா் 9, வெம்பாக்கம் 4.20 மி.மீ. மழை பதிவானது.
திருண்ணாமலை, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மழை பெய்தது.