விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 42,951-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 334-ஆக அதிகரித்தது.
இதனிடையே, சிகிச்சை முடிந்து 59 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 42,088-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் தற்போது 529 போ் சிகிச்சையில் உள்ளனா்.