விழுப்புரம்

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மாரடைப்பால் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (57). இவா், திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

வழக்கம்போல, சென்னை கோயம்பேட்டிலிருந்து சனிக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி பேருந்தை அசோக்குமாா் ஓட்டி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கொள்ளாா் பகுதியில் பேருந்து வந்தபோது, அங்கிருந்த சாலையோர தேநீா் கடையில் பேருந்தை அசோக்குமாா் நிறுத்தினாா். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் அசோக்குமாா் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். எனினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அசோக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, பேருந்து ஓட்டுநா் அசோக்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடா்ந்து, மாற்று ஓட்டுநா் வரவழைக்கப்பட்டு பயணிகள் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT