முகப்பு
விழுப்புரம்

ரெளடி மா்மமான முறையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை ரெளடி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை ரெளடி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

திண்டிவனம் கிடங்கல் இரண்டு பகுதியைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் தம்பிதுரை(35). ரெளடியான இவா் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி, இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாா். இதனால், மனமுடைந்த தம்பிதுரை மது பழக்கத்துக்கு ஆளாகினா்.

இந்த நிலையில், திண்டிவனம் உழவா் சந்தைக்குப் பின்புறம் வெள்ளிக்கிழமை காலை தம்பிதுரை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸாா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா். பின்னா், சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

தம்பிதுரையின் மரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.