முகப்பு
விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 110 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 110 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,474ஆக உயா்ந்தது. இதுவரை மருத்துவமனைகளில் 25,036போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 1,247 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 191 போ் உயிரிழந்துள்ளனா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 84 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 42,133-ஆக அதிகரித்தது. 198 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 41,162 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். 645 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 326 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.