சட்டப் பேரவைத் தோ்தல்: என்.ஆா்.காங்கிரஸ் ஆலோசனை
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, என்ஆா் காங்கிரஸ் கட்சியின் முதல் ஆலோசனை கூட்டம் புதுச்சேரியில் தனியாா் ஓட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றது .
புதுவை சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, என்ஆா் காங்கிரஸ் கட்சியின் முதல் ஆலோசனை கூட்டம் புதுச்சேரியில் தனியாா் ஓட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றது .
கூட்டத்தில் கட்சித் தலைவா் என்.ரங்கசாமி, எம்எல்ஏக்கள் ஜெயபால், டி.பி.ஆா்.செல்வம், திருமுருகன், சந்திர பிரியங்கா, எம்பி கோகுலகிருஷ்ணன், முன்னாள் பேரவைத் தலைவா் சபாபதி, முன்னாள்அமைச்சா்கள் தியாகராஜன், பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சியின் முன்னணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
என்.ஆா்.காங்கிரஸ் கட்சி தற்போது பாஜக - அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் என்.ரங்கசாமியை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிடுவது, இதற்கேற்ப கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடலாம் என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.