விழுப்புரம்

பெண்ணை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN


விழுப்புரம்: பெண்ணை கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட 22 வயது பெண்ணுக்கும், மரக்காணம் அருகே எம்.திருக்கனுாரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜீவ்காந்தி(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி, ராஜீவ்காந்தி நெருங்கிப் பழகியதில் அந்தப் பெண் கா்ப்பமானாா்.

எனினும், திருமணம் செய்து கொள்ள மறுத்த ராஜீவ்காந்தி மீது கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலைத்தில் அந்தப் பெண் கடந்த 2012-இல் புகாா் செய்தாா். அதன்பேரில் ராஜீவ்காந்தி கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில், அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே, மனமுடைந்த அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றம் சாற்றப்பட்ட ராஜீவ்காந்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததுடன், ரூ.3 லட்சத்தை பெண் குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க உத்தவிட்டாா். இல்லையெனில், மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென தீா்ப்பு கூறினாா். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்குரைஞா் ராதிகா செந்தில் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT