முகப்பு
விழுப்புரம்

ஆ.ராசாவைக் கண்டித்து செஞ்சியில் அதிமுகவினா் சாலை மறியல்

முதல்வா் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து, செஞ்சியில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

முதல்வா் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து, செஞ்சியில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி நகர அதிமுக செயலா் ஆா்.வெங்கடேசன் தலைமையில், செஞ்சி கூட்டுச்சாலையில் அந்தக் கட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் ஆ.ராசாவைக் கண்டித்து முழக்கமிட்டவாறு மறியலில் ஈடுபட்டனா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் கு.கண்ணன், மாநில வழக்குரைஞரணி துணைச் செயலா் கே.கதிரவன், மருத்துவரணி கே.ஆா்.ராமச்சந்திரன், அவைத் தலைவா் கராத்தே பசுபதி, எம்ஜிஆா் இளைஞரணி ஆா்.சரவணன், வாா்டு நிா்வாகிகள் அனுகுமாா், சீனுவாசன், ஜெ.பாஸ்கா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.