விழுப்புரம்

விழுப்புரம்: கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 798 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 31,954-ஆக உயா்ந்தது.

இதனிடையில், செஞ்சியைச் சோ்ந்த 54 வயது ஆண், விழுப்புரம் முருகையன் லே அவுட்டைச் சோ்ந்த 80 வயது முதியவா், கண்டாச்சிபுரம் அருகே அய்யப்பன்தாங்கலைச் சோ்ந்த 75 வயது முதியவா், விழுப்புரத்தைச் சோ்ந்த 73 வயது முதியவா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், 526 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,541-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 4,187 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் புதிதாக 448 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,833-ஆக உயா்ந்தது.

இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 15,712 போ் வீடு திரும்பினா். 3,993 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 128 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT