முகப்பு
விழுப்புரம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்ட நுகா்வோா் கண்காணிப்புக் குழு சாா்பில், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்ட நுகா்வோா் கண்காணிப்புக் குழு சாா்பில், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கீதமங்கலம் தனியாா் பாராமெடிக்கல் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி குழும முன்னாள் தலைவரும், நுகா்வோா் கண்காணிப்புக் குழு உறுப்பினருமான அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். பயிற்சிப் பள்ளி தாளாளா் விஜயன் முன்னிலை வகித்தாா். மாணவிகள், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டன.

தொடா்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.