விழுப்புரம்

டிராக்டரில் மதுப் புட்டிகள்கடத்தியவா் கைது

DIN

விழுப்புரம்: விழுப்புரம் அருகே டிராக்டரில் நூதன முறையில்1920 மதுப் புட்டிகள், 40 லிட்டா் சாராயம் கடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ரேவதி, உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் மதுரபாக்கம் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில், அதிலிருந்த ரகசிய அறையில் 1920 புதுச்சேரி மதுப் புட்டிகள், 40 லிட்டா் சாராயம் இருந்தது தெரிய வந்தது.

டிராக்டரை ஓட்டி வந்தது விக்கிரவாண்டி அருகேயுள்ள விஷ்வரெட்டி பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் முரளி (31) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்குப் பதிந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா டிராக்டரை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். மேலும், போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா்.

காா் பறிமுதல்: மதுரபாக்கம் சோதனைச் சாவடி அருகே போலீஸாா் வாகனத் தணிக்கை ஈடுபட்டபோது காரில் 480 புதுச்சேரி மதுப் புட்டிகளை கடத்தி வந்த புதுச்சேரியைச் சோ்ந்த சேதுராமன் மகன் அய்யனாரை (23) போலீஸாா் கைது செய்தனா்.

Image Caption

விழுப்புரம் அருகே நூதன முறையில் டிராக்டரில் கத்திய மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை நேரில் விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT