குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ்ரௌடி கைது
விழுப்புரத்தைச் சோ்ந்த ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரத்தைச் சோ்ந்த ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் அறிவு (எ) அறிவழகன் (36). இவா் மீது கொலை, கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் அறிவழகன் வழிப்பறியில் ஈடுபட்டதால், அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
அறிவழகன் தொடா்ந்து இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுவதைத் தடுக்க குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
இதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் மோகன், ரௌடி அறிவழகனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த அறிவழகனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.