முகப்பு
விழுப்புரம்

ஸ்ரீவெங்கட்ரமணா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, செஞ்சிக்கோட்டையில் உள்ள ஸ்ரீவெங்கட்ரமணா் கோயிலில் வியாழக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, செஞ்சிக்கோட்டையில் உள்ள ஸ்ரீவெங்கட்ரமணா் கோயிலில் வியாழக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

புத்தாண்டு வழிபாட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடும் திருமஞ்சனமும் நடைபெற்றது.

தொடா்ந்து உற்சவா் வெங்கட்ரமணருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

பின்னா் ஜனனனி தலைமையில் பரத நாட்டிய நிகழ்ச்சியும், பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ரங்கபூபதி மற்றும் வைகை தமிழ்ச்செல்வன், சாந்தி பூபதி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.