விழுப்புரத்தில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான சுமாா் 500 பேரை தோ்வு செய்யவுள்ளன. இதில், எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம், இளநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் பங்கேற்கலாம். அனுமதி முற்றிலும் இலவசம்.
இதுகுறித்து கூடுதல் விவரம் அறிய உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விழுப்புரம் (தொலைபேசி எண்: 04146 226417) என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம்.