போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அமா்வு நீதிபதி பூா்ணிமா தலைமை வகித்தாா். புல முதல்வா் செந்தில் முன்னிலை வகித்தாா். உதவிப் பேராசிரியா் பெமினாசெல்வி வரவேற்றாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்திரன் விளக்கவுரையாற்றினாா். நீதிபதிகள் பிரபாதாமஸ் அருண்குமாா், வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் பத்மஸ்ரீ ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். நீதிபதி விஜயகுமாா் நன்றி கூறினாா்.