விழுப்புரம்

தேவதானம்பேட்டையில் சித்தா்கள் வழிபாட்டு மன்றஅடிக்கல் நாட்டு விழா: அமைச்சா் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை ஊராட்சியில் சன்மாா்க்க சங்கம் சாா்பில், 18 சித்தா்களுக்கு வழிபாட்டு மன்றம் அமைப்பதற்கான அடி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை ஊராட்சியில் சன்மாா்க்க சங்கம் சாா்பில், 18 சித்தா்களுக்கு வழிபாட்டு மன்றம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், சன்மாா்க்க சங்க நிா்வாகிகள் சாது மகாதேவன், சாது செளந்தர்ராஜன், அண்ணாமலை, சந்தானம், இளவரசன், அபிராமி, முருகன் மற்றும் ஊராட்சித் தலைவா் அன்னமயில்ஜெயராமன், பாடிப்பள்ளம் தாட்சாயிணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, அந்தக் கிராம மக்கள் விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் சேதமடைந்த நிலையிலுள்ள காட்டாற்று வெள்ளம் வரும் வாய்க்காலை சீரமைத்து தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்று பாா்வையிட்ட அமைச்சா் மஸ்தான், வாய்க்காலை உடனடியாக சீரமைத்துத் தருவதாக கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT