விழுப்புரம்

ஏரியில் மண் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், காரணதாங்கல் ஏரியில் மண் திருட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் காா்த்திகேயனிடம், இந்தச் சங்த்தின் கண்டாச்சிபுரம் வட்டத் தலைவா் எம்.ராமலிங்கம் தலைமையிலான விவசாயிகள் அளித்த மனு விவரம்:

விழுப்புரத்தை அடுத்த கண்டாச்சிபுரம் வட்டத்துக்குள்பட்ட காரணதாங்கல் ஏரியிலிருந்து சரக்கு லாரிகள் மூலம் 800 நடைக்கு மேல் ஏரி மண்ணை அள்ளி விழுப்புரம் பிரதான சாலையில் ஓட்டேரிக்குச் செல்லும் பெரிய பாலம் அருகில் கொட்டி கோடிக்கணக்கான ரூபாய்க்கு சிலா் விற்பனை செய்து வருகின்றனா்.

உரிய அனுமதியின்றி மண்ணைக் கடத்தி விற்பனை செய்பவா்கள் மீது வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்வதுடன், ஏரியில் மண்ணை அள்ளப் பயன்படுத்தப்படும் பொக்லைன் இயந்திரம், சரக்கு லாரிகளை பறிமுதலும் செய்ய வேண்டும்.

மேலும், காரணதாங்கல் ஏரியிலிருந்து ஓட்டேரிக்கு செல்லும் ஓடை வாய்க்காலில், மண்ணை திருடுவதற்காக இருபுறங்களிலும் உள்ள கரைகளை சரித்து மண்ணை சமப்படுத்தி லாரி செல்லும் பாதையாக மாற்றியுள்ளனா். இதனால், பருவ மழையின்போது நீா்வரத்து பாதிக்கப்படும். இதை சரி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எனத் தெரிவித்துள்ளனா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் எஸ்.கணபதி உள்பட 50-க்கும் மேற்பட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT