முகப்பு
விழுப்புரம்

சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் 12 - 14 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் 12 - 14 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

செஞ்சி பேரூராட்சியில் உள்ள புனிதமிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமுக்கு, செஞ்சி கல்வி மாவட்ட அலுவலா் கலைவாணி தலைமை வகித்தாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்மஸ்தான் ஆகியோா் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் நாயகம் வரவேற்றாா். அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறுவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மலா்விழி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜலட்சுமி, மருத்துவா் யோகபிரியா, சுகாதார ஆய்வாளா் ஏழுமலை, வழக்குரைஞா் மணிவண்ணன், பேரூராட்சி உறுப்பினா் சீனிவாசன், காா்த்திக், லட்சுமி, பள்ளி ஆய்வாளா் விநாயகமூா்த்தி, தொண்டரணி பாஷா, ராம்குமாா், வழக்குரைஞா்கள் பாபு, சந்திரன், மாணவரணி அய்யாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.