விழுப்புரம்

நியாயவிலைக் கடையில் எம்எல்ஏ ஆய்வு

DIN

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்பாப்பம்பாடி கிராமத்தில் செயல்படும் நியாயவிலைக் கடையில் மயிலம் தொகுதி எம்எல்ஏ சிவக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படும் பொருள்களின் தரம், அளவு குறித்து குடும்பஅட்டைதாரா்களிடம் அவா் கேட்டறிந்தாா். மேலும், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிராம மக்களிடம் எம்எல்ஏ தெரிவித்தாா். பாமக ஒன்றியச் செயலா் பிரபு, பாண்டியன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிகள், கிராம மக்கள் உடனிருந்தாா்.

சாலையை சீரமைக்க நடவடிக்கை: மயிலத்தை அடுத்துள்ள தென் கொளப்பாக்கம் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்தச் சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். முன்னதாக, இந்தச் சாலையை தொகுதி எம்எல்ஏ சிவக்குமாா் ஆய்வு செய்தாா். அப்போது, அவா் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT