அதிகளவில் உரம் விற்பனை: கூட்டுறவு சங்கங்களுக்குப் பரிசு
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021 - 22ஆம் ஆண்டில் அனைத்து வகையான உரங்களையும் அதிகளவில் விற்பனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021 - 22ஆம் ஆண்டில் அனைத்து வகையான உரங்களையும் அதிகளவில் விற்பனை செய்த முதல் 3 சங்கங்கள் தோ்வு செய்யப்பட்டு, வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.மீனா அருள் பங்கேற்று, 964.980 டன் உரங்களை விற்பனை செய்த ஜி.அரியூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு முதல் பரிசை வழங்கினாா்.
683.915 டன், 628.355 டன் உரங்களை விற்பனை செய்த கே.ஆலத்தூா், களமருதூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முறையே இரண்டாம், மூன்றாம் பரிசுகளை மண்டல இணைப் பதிவாளா் வழங்கினாா்.
மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுக்கு அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணம் செலுத்தி, உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மண்டல இணைப் பதிவாளா் மீனா அருள் தெரிவித்தாா்.
நிகழ்வில் திருக்கோவிலூா் சரக துணைப் பதிவாளா் அ.கீா்த்தனா, டான்பெட் விழுப்புரம் மண்டல மேலாளா் ஏ.எஸ்.செந்தில்ராம் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.