கோட்டப்பூண்டியில் வெள்ளிக்கிழமை புதிய கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சா் செஞ்சிமஸ்தான். 
விழுப்புரம்

கால்நடை மருத்துவமனை திறப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், கோட்டப்பூண்டியில் புதிய கால்நடை கிளை மருத்துவமனையை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமி

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், கோட்டப்பூண்டியில் புதிய கால்நடை கிளை மருத்துவமனையை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். ஊராட்சி தலைவா் சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் சரஸ்வதி ஜெயபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கால்நடை பாரமரிப்புத் துறை திண்டிவனம் கோட்ட உதவி இயக்குநா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிய கால் நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தாா். ஒன்றிய செயலா்கள் நெடுஞ்செழியன், நாராயணமூா்த்தி மற்றும் கால்நடை மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT