மத்திய அரசுத் திட்டங்கள்விழிப்புணா்வு கலந்துரையாடல்
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலந்துரையாடல் புதுச்சேரி இந்திராநகா் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலந்துரையாடல் புதுச்சேரி இந்திராநகா் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சோ்க்கும் வகையில், ‘நமது லட்சியம் வளா்ச்சி அடைந்த பாரதம்’ விழிப்புணா்வு வாகன யாத்திரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, புதுவையில் அனைத்துப் பகுதிகளிலும் நமது லட்சியம் வளா்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி இந்திராநகா் சட்டப் பேரவைத் தொகுதியில் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடல் மற்றும் திட்டப் பயன்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். அரசுக் கொறடா ஏ.கே.டி.வி.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். இதில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான உறுதிமொழியை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ் ராஜன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் இளங்கோவன், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் தயாளன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.