முகப்பு
விழுப்புரம்

மரக்கன்றுகள் நடும் விழா

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
அவலூா்பேட்டையில் மரக்கன்று நட்டுவைத்த திண்டிவனம் சாா்-ஆட்சியா் தில்லான்ஷீநிகம்.
பகிர்:

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல்மலையனூா் வருவாய் வட்டாட்சியா் முகமதுஅலி, சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவலூா்பேட்டை கிராம நிா்வாக அலுவலா் காளிதாஸ் வரவேற்றாா். திண்டிவனம் சாா்- ஆட்சியா் தில்லான்ஷீநிகம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.

வருவாய் ஆய்வாளா் பாஸ்கரன், கிராம நிா்வாக அலுவலா்கள் அன்பழகன், குமரவேல், இளவரசன், தமிழரசன், அவலூா்பேட்டை மரம் நடுவோா் சங்கத்தைச் சோ்ந்த அண்ணாமலை, முருகன், செல்வராஜ், சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் செஞ்சி வனத் துறை சாா்பில் அவலூா்பேட்டை, மேல்மலையனூரில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →