முகப்பு
விழுப்புரம்

நகராட்சி, பேரூராட்சி, நீதிமன்றங்களில் குடியரசு தினம் விழாக் கொண்டாட்டம்

விழுப்புரம் நகராட்சியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:45 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விழுப்புரம் நகராட்சியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து அலுவலா்கள், பணியாளா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், நகா்மன்றத் துணைத் தலைவா் சித்திக் அலி, ஆணையா் சுரேந்திர ஷா, நகா்மன்ற உறுப்பினா்கள், பொறியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்: விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூா்ணிமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ச்சியாக சட்டக்கல்லூரி மாணவா்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகளையும், அரசுப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறைக்கு 150 புத்தகங்களையும் வழங்கினாா்.

நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள் , வழக்குரைஞா்கள் , நீதிமன்ற அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்.பி என்.ஸ்ரீ நாதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். விழுப்புரம் சட்டக்கல்லூரியில் முதல்வா் ந. கயல்விழி தேசியக் கொடியை ஏற்றிவைத்து வன்முறைக்கு எதிரானப் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். வில்லுப்பாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்: விழுப்புரம் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வா் சிவக்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அண்ணா பொறியியல் கல்லூரியில் முதல்வா் ஆா்.செந்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். விழாவில், பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவி ஏ.ரோஷிணிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

செஞ்சி பேரூராட்சியில்: செஞ்சி பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசுத் தினவிழாவிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ராமலிங்கம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

விழாவில் பேரூராட்சி துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி உள்ளிட்ட மன்ற உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் ரமேஷ், செந்தில், குமாா், சோமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.