விழுப்புரம்: மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜிநாமா!
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முரளி என்கிற ரகுராமன். இவர் ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியிலிருந்து முரளி என்கிற ரகுராமன் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முரளி என்கிற ரகுராமன். இவர் ஸ்ரீராம் அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் சார்பில் கடந்த 5-ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அதிமுக பிரமுரகராக உள்ள முரளி என்கிற ரகுராமன், விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பொறுப்பிலும் உள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி முரளி என்கிற ரகுராமனை கட்சியிலிருந்து நீக்கிஅதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பதவியிலிருந்து தான் ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ரவிச்சந்திரனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.