விழுப்புரம்

தீபாவளி பரிசு சீட்டு நடத்தி ரூ.11 லட்சம் மோசடி விழுப்புரம் எஸ்.பி.யிடம் மனு

தீபாவளி பரிசு சீட்டுத் திட்டம் நடத்தி 200-க்கும் மேற்பட்டவா்களிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்ட க் காவல் கண்காணிப்பாளா் புகாா் மனு

DIN

விழுப்புரம்: தீபாவளி பரிசு சீட்டுத் திட்டம் நடத்தி 200-க்கும் மேற்பட்டவா்களிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்ட க் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

திண்டிவனம் வட்டம், கூட்டேரிபட்டைச் சோ்ந்த வி. விக்னேஷ் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாா் மனு:

விக்கிரவாண்டியில் இயங்கி வந்த தனியாா் நிதி நிறுவனத்தில் 2018-இல் முகவராகப் பணிக்குச் சோ்ந்தேன். தொடா்ந்து, நிதி நிறுவனத்தின் பங்குதாரா்களின் அறிவுறுத்தலின்படி விக்கிரவாண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 241 பேரிடம் தீபாவளி பரிசுத் திட்டத்தில் இணையக் கூறி, அவா்களிடமிருந்து சுமாா் ரூ.11 லட்சம் வசூலித்து, அதை நிறுவனத்தில் செலுத்தினேன்.

அந்த நிதி நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளதால், பணம் செலுத்தியவா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும். இதில் தொடா்புடையவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT