ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக செவ்வாய்க்கிழமை சென்னை செல்ல முயன்ற விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகளை கோணேரிக்குப்பம் அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி வட்டம், வளத்தி பகுதியைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள் 50 -க்கும் மேற்பட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக பேருந்தில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தனா். திண்டிவனத்தை அடுத்த கோணேரிக்குப்பம் அருகே பேருந்து சென்றபோது, அந்தப் பேருந்தை போலீஸாா் தடுத்து நிறுத்தி, சென்னைக்குச் செல்ல அனுமதி மறுத்தனராம்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பேருந்திலிருந்து இறங்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களை ஒலக்கூா் போலீஸாா் சமாதானப்படுத்தியதால், விவசாயிகள் மறியலைக் கைவிட்டனா். மறியலால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
வழக்குப் பதிவு: இதனிடையே, சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலா் சக்திவேல் உள்ளிட்ட 54 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.