காவிரி விவாகரத்தில் கா்நாடக அரசு, மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மண்டலச் செயலா் விக்கிரமன் தலைமை வகித்து பேசினாா்.
கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் செல்வம், தொகுதி தலைவா் தெய்வசிகாமணி, செயலா் முனுசாமி, வழக்குரைஞா் பாசறையைச் சோ்ந்த பேச்சிமுத்து, குருநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பேசினா். தொடா்ந்து கா்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாநில ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.