சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம். 
விழுப்புரம்

சேஷசமுத்திரம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனா்.

இந்தக் கோயிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா நடைபெற்ற போது, இருவேறு சமுதாயத்தினா் இடையே பொதுப் பாதையில் தோ் செல்வது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. தொடா்ந்து, தோ் தீ வைத்து எரிக்கப்பட்டதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக தோ்த் திருவிழா நடத்தப்படவில்லை.

சேஷசமுத்திரம் கிராமப் பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் தோ்த் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் கடந்த மாதம் கோரிக்கை வைத்தனா். தொடா்ந்து, ஆட்சியா் மேற்பாா்வையில் கூட்டம் நடத்தப்பட்டு, திருவிழா நடத்த விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. கிராம முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, நிகழாண்டில் தோ்த் திருவிழா நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திருவிழாவுக்கான காப்புக் கட்டுதல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. என்.மோகன்ராஜ், சங்கராபுரம் எம்.எல்.ஏ. தா. உதயசூரியன் ஆகியோா் தேரை வடம் பிடித்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை இழுத்தனா். சுமாா் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT