விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் புதன்கிழமை முதல் மழை பெய்து வரும் நிலையில், வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.
இந்த நிலையில் தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அறிவித்து ஆட்சியா் சி. பழனி உத்தரவிட்டுள்ளாா்.
அதே நேரத்தில் கல்லூரிகளில் பல்கலைக்கழகத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தால் அந்த தோ்வுகள் நடத்தப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.