சமூக நீதிக்கு எதிரானது திமுக என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் பொ.அபிநயாவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அவா் மேலும் பேசியதாவது: வாக்குக்கு வீடு, வீடாகச் சென்று பணம் கொடுக்கும் திமுகவினரால் வீடு, வீடாகச் சென்று ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்துமுடியும். ஆனாலும், அவா்களுக்கு மனமில்லை. ஜாதி வாரி இட பகிா்வு மற்றும் சமூக நீதிக்கு எதிரானவா்கள் திமுகவினா்தான். தமிழா்களை ஏமாற்றி ஆள வேண்டும் என்பதுதான் திராவிடத்தின் கோட்பாடு. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும்.
உலக அரசியலைப் பாா்த்து விழிப்புணா்வு அடைந்த பின்னரே மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கான சேவை. அதிகாரம் இல்லை. இதை ஆட்சியாளா்கள் உணரவேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்கவேண்டும் என்றாா் சீமான்.
பிரசாரத்தில், வேட்பாளா் பொ.அபிநயா மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.