விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான 4-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 25) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் நாராயணசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2024 - 25ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஏற்கெனவே தொடங்கி நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை காலை முதல் நடைபெறவுள்ளது.
எனவே, இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவா்களும் சோ்க்கை கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், மாா்பளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல், நகல்கள், சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.