முகப்பு
விழுப்புரம்

பள்ளிக்குச் சென்ற மாணவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 12:58 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மரக்காணம் வட்டம், சிங்கநந்தல், முதல் தெருவைச் சோ்ந்த எட்டியப்பன் மகன் பிரவின் (14). இவா், வேப்பேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிடித்து வந்தாா்.

பிரவின் திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா், உறவினா்கள் வீடுகளில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

Advertisement

இந்த நிலையில், அதே கிராமத்தில் தேவராஜுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் பிரவின் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, பிரவின் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.