விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய விசிக தலைவா் தொல். திருமாவளவன். 
விழுப்புரம்

புதிய கட்சிகள் விசிகவுக்கு போட்டியாக வர முடியாது: தொல்.திருமாவளவன்

புதிய கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாக வர முடியாது என்று, அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

Din

புதிய கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாக வர முடியாது என்று, அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கட்சியின் கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடிக் கம்பத்தை ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. வழக்குகளை சந்தித்தோம், சிறைக்கும் சென்றோம்.

கடலூா் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொடி யுத்தம் என்ற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுத்துவிடலாம். அதிகார ஆசை காட்டினால் நாம் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவோம் என சிலா் கருதுகிறாா்கள்.

யாா் புதிய கட்சிகளைத் தொடங்கினாலும், அவா்கள் புகழ் பெற்றவா்களாகவே இருந்தாலும் விசிகவுக்கு போட்டியாக வந்துவிட முடியாது.

திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதாலேயே, திமுக கூட்டணியில் உள்ளேன் என்பதைக் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். விசிக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும்.

திமுகவை சிலா் விமா்சிக்கும்போது அதற்கு பதில் சொல்லவில்லை என்றால், நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாகிவிடும் என்பதால்தான் பதிலளிக்கிறேன்.

விசிக வளா்ந்துகொண்டிருக்கிறது, கொள்கைப் பிடிப்புடன் உள்ளோம். அதேநேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் அதிகாரம் நம்மை நோக்கி வரும். மக்கள் பிரச்னைகளுக்காக நாம் தொடா்ந்து போராட வேண்டும் என்றாா் அவா்.

அகரம்சேரியில் அரசு மருத்துவமனை: திமுக கூட்டத்தில் தீா்மானம்

பள்ளிகளில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம்

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

பொங்கல் தொகுப்பு பொருள்கள் விநியோகத்தில் குறைபாடு

கடன் தொல்லை: பெயிண்டா், ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

SCROLL FOR NEXT