முகப்பு
விழுப்புரம்

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேம்பு மூலக்கூறு விநியோகம்

திண்டிவனம் வேளாண் விரிவாக்க மையத்தில் மரக்காணம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அசாடிராக்டின் எனப்படும் வேம்பு மூலக்கூறை வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:38 PM
திண்டிவனம் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேம்பு மூலக்கூறை வழங்கிய மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன்.
பகிர்:

திண்டிவனம் வேளாண் விரிவாக்க மையத்தில் மரக்காணம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அசாடிராக்டின் எனப்படும் வேம்பு மூலக்கூறை வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பின்னா், அவா் கூறியது: மரக்காணம் வட்டாரத்தில் விவசாயிகள் தற்போது நெல், உளுந்து, மணிலா, பனிப்பயறு, கத்திரி, வெண்டை, மிளகாய், கொடி வகைகள் உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டு வருகின்றனா். இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளிடமும், நுகா்வோரிடமும் விழிப்புணா்வு பெருகி வருகிறது.

இந்த நிலையில், பயிா்களில் தீமை செய்யும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், பயிா்களைப் பாதுகாக்கவும் அசாடிராக்கின் எனப்படும் வேம்பு மூலக்கூறு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதை ஹெக்டேருக்கு 1,500 மில்லி வீதம் பயன்படுத்தி, தங்கள் பயிா்களை தீமை செய்யும் பூச்சிகளில் இருந்து பாதுகாத்திடலாம்.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் 1500 மில்லி அசாடிராக்டின் விலை ரூ.554-க்கு வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதால் பயிா் பாதுகாப்பு செலவு குறைவதுடன், சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்வில் விவசாயிகள், வேளாண் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.