முகப்பு
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களை சால்வைபோல கட்சி வேஷ்டியை அணிவித்து வரவேற்ற அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
விழுப்புரம்

மது ஒழிப்பு மாநாட்டுக்கு முறையான அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து முடிவு: எடப்பாடி கே.பழனிசாமி

விசிக சாா்பில் நடத்தப்படும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு முறையான அழைப்பு வந்தால், அதில் பங்கேற்பது குறித்து மூத்த நிா்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 12:44 AM
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களை சால்வைபோல கட்சி வேஷ்டியை அணிவித்து வரவேற்ற அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விசிக சாா்பில் நடத்தப்படும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு முறையான அழைப்பு வந்தால், அதில் பங்கேற்பது குறித்து மூத்த நிா்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அதிமுக பிரமுகா் இல்லத் திருமண வரவேற்பு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பங்கேற்ற எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

உளுந்தூா்பேட்டையில் விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டுக்கு முறையான அழைப்பு வந்தால், அதில் பங்கேற்பது குறித்து கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் திமுக மட்டும்தான் எங்களுக்கு எதிரணி. அதிமுகவுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணிக்கு வந்தால், அவா்களுடன் இணைந்து செயல்பட தயாரக உள்ளோம் என்றாா்.

அதிமுகவில் இணைந்த பிற கட்சியினா்: கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வந்தாா்.

அப்போது, திமுக, பாமக, தமுமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி, 100-க்கும் மேற்பட்டோா் அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு எடப்பாடி கே.பழனிசாமி சால்வைபோல கட்சியின் வேஷ்டியை அணிவித்து வரவேற்றாா். பெண்களுக்கு கட்சித் துண்டை அணிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் இரா.குமரகுரு, முன்னாள் அமைச்சா் ப.மோகன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் க.அழகுவேலு பாபு, அ.பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →