முகப்பு
விழுப்புரம்

காஜி, நியமன உறுப்பினா் தோ்வுக்கான அறிவிப்புகள் ரத்து

விழுப்புரம் மாவட்டத்துக்கு காஜி மற்றும் காஜி நியமன தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:17 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்துக்கு காஜி மற்றும் காஜி நியமன தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

விழுப்புரம் மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள காஜியின் நியமன ஆணையில் கால வரம்பு குறிப்பிடப்படவில்லை. இதனால் காஜி சட்டம்-1880 பிரிவு 2-இன் கீழ் விழுப்புரம் மாவட்டத்துக்கு காஜியாக நியமனம் செய்யப்பட்ட நபரையே மாவட்ட காஜியாக கருதலாம் என அரசின் தெளிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 18.10.2023 மற்றும் 21.10.2023 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட காஜி மற்றும் காஜி நியமனக்குழு உறுப்பினா் தோ்வுக்கான அறிவிப்புகள் (பத்திரிகை செய்திகள்) ரத்து செய்யப்படுகிறது. மேலும் விழுப்புரம் மாவட்ட காஜி மற்றும்

காஜி தோ்வுக்குழு உறுப்பினா் பதவிக்காக வரப் பெற்றுள்ள விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகிறது எனவும் ஆட்சியா் சி. பழனி அதில் தெரிவித்துள்ளாா்.