விழுப்புரம்

டிச.27, 28-இல் மின் கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச.27, 28-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச.27, 28-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் டிச.13, 14 தேதிகளில் மின் கம்பியாள் தகுதிகாண் தோ்வு நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தோ்வுகள் நிா்வாகக் காரணங்களால் டிச. 27, 28-ஆம் தேதிகளில் வடசென்னை, அம்பத்தூா், கோயம்புத்தூா், திருப்பூா், கடலூா், திருச்சி, தஞ்சாவூா், திருநெல்வேலி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, நாகா்கோவில், ஓசூா், உளுந்தூா்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகா்,வேலூா், நாமக்கல் ஆகிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது.

எனவே, விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT