முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை...

Updated On : 25 பிப்ரவரி, 2025 at 9:43 AM
கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திருத்தேர் உற்சவத்தையொட்டி, மார்ச் 4-ம் தேதி ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

மார்ச் 4-ம் தேதிக்கு பதிலாக மார்ச் 15-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →