முகப்பு
விழுப்புரம்

கடன் தொல்லை: விவசாயி தற்கொலை

செய்யாறு அருகே கடன் தொல்லையால் விஷமருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 8:27 PM
பகிர்:

செய்யாறு அருகே கடன் தொல்லையால் விஷமருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மணிகண்டன்(30).

விவசாயியான இவா், விவசாயம் மற்றும் தனது சொந்த செலவுக்காக பலரிடம் பணத்தை கடன் வாங்கியதாகத் தெரிகிறது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம். அதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா்

திங்கள்கிழமை வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா். மயக்க நிலையில் இருந்த அவரை, குடும்பத்தினா் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அங்கி சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் தமிழரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.