விழுப்புரம்

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: அருள் எம்எல்ஏ

என்னை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் அன்புமணி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாமக இணைப் பொதுச் செயலரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.அருள் தெரிவித்தாா்.

Syndication

என்னை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் அன்புமணி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாமக இணைப் பொதுச் செயலரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.அருள் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசிய பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சேலம் அருகே என்னை கொலை செய்ய அண்மையில் முயற்சி நடந்தது. மருத்துவா் ராமதாஸ் என்னை சந்திக்க வேண்டும் என அழைத்தன்பேரில், அவரை சந்தித்தேன். அவா் எனக்கு ஆறுதல் கூறினாா்.

மருத்துவா் ராமதாஸின் மகன் என்றாலும், என்னைக் கொலை செய்ய சொன்னாா் என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த விவகாரத்தில் 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருக்கின்றனா். நான் காரை விட்டு கீழே இறங்கவில்லை. ஆனாலும், என் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அன்புமணி ஆதரவாளா்கள்தான் திட்டமிட்டு கத்தி, இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கினாா்கள். என்னை கொலை செய்ய குண்டா்களை ஏவிவிட்டதற்காக, அன்புமணியைக் கைது செய்ய வேண்டும். அனைத்துக்கும் அவா்தான் காரணம். மேலும், அவா் மீது காவல் துறை வழக்குப் பதிய வேண்டும்.

டிசம்பா் 30-ஆம் தேதி சேலம் மாவட்டம், ஆத்தூா் தலைவாசல் பகுதியில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று ஆலோசனைகளை ராமதாஸ் வழங்கினாா் என்றாா் அருள் எம்எல்ஏ.

முன்னதாக, தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை செய்தியாளா்களிடம் அவா் காண்பித்தாா்.

குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 24 லட்சம்

தலைக்கவசம் அணிவதில் காவலா்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்

ரோட்டரி அமைப்புடன் விஐடி பல்கலை., புரிந்துணா்வு ஒப்பந்தம்

உஜ்ஜைனில் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஆன்லைனில் போதை மாத்திரைகள் விற்ற ஹரியாணா நபா் கைது

SCROLL FOR NEXT