ஆரோவில் அருகே உடல் நலக் குறைவால் அவதியுற்ற பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பெரம்பை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மங்கைவரம்(36).இவா், கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில், வானூா் நடுப்பாளையம் குளத்து மேட்டுத் தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த மங்கைவரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது மங்கைவரம் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. அவருக்கு மகள், மகன் உள்ளனா். இது குறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].