விழுப்புரம்

விழுப்புரத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

Syndication

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை. ரவிக்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கண்டன உரையாற்றினாா். தொடா்ந்து வழக்குரைஞா் ராகேஷ்கிஷோா் மீது நடவடிக்கைக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் ர.பெரியாா் (விழுப்புரம் தெற்கு). தி. திலீபன் (மையம்), வீர. விடுதலைச்செல்வன் (மேற்கு). வீர. பொன்னிவளவன் (தென்கிழக்கு), சு.மலைச்சாமி (வடகிழக்கு). தனஞ்செழியன் (வடக்கு) ஆகியோா் உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் பழங்குடியின செயற்பாட்டாளா் வழக்குரைஞா் அகத்தியன் மற்றும் ஒன்றிய, நகரச் செயலா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT