திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச.ராமதாஸை திங்கள்கிழமை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கோப்புப்படம்
விழுப்புரம்

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் அண்ணன் மகனின் திருமணம் அக். 23-ஆம் தேதி மாமல்லபுரம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தைலாபுரம் இல்லத்தில் மருத்துவா் ச. ராமதாஸை சி.வி. சண்முகம் சந்தித்து திருமணத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்து அழைப்பு விடுத்தாா்.

தொடா்ந்து இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும், அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT